சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனமும் உள்ளது, எந்தச் சிக்கலும் இன்றி பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்  காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்தும் வாழ்விடங்களை இழந்தும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், ஹெலிகாப்டரில் சென்று ...

கோவை தெற்கு எம்.எல்.ஏவும்,பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா உள்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன. சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் ...

 பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் ...

தென்காசி: 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பழனி நாடாரும், அதிமுக சார்பில் வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். ...

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ.3 லட்சம், ஸ்பெயின் சாண்டாண்டரில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப். ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.சங்கர் முத்துசாமிக்கு ரூ.4 லட்சமும், ஆந்திராவில் ...

கோடநாடு வழக்கில் கொள்ளை நிகழ்ந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் ...

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை வரும் ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாஜக திட்டம்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ...

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. நேற்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.. இந்த கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டபோதே, 2 விதமான எதிர்பார்ப்புகள் எழுந்தன. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து ...

சென்னை: பொது சிவில் சட்டம் கொண்டு வரும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்; தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மக்களவையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன், சமத்துவம், ...