ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் சிவகுமார் பி. எல். சுந்தரம் முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மத்திய ...

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் (24.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு ...

எங்கள் அணியும் இந்தியா அணி தான் என முதல்வர் கோப்பை இறுதி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை ...

புதுடெல்லி: மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி ...

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும்கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், ...

புதுடெல்லி: நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தமாக 7.4 கோடி பேர் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் ஆகும். நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ...

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து சதித் திட்டம் தீட்டுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா. இம்மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது பாஜக. அதுவும் காங்கிரஸ்- ...

 ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யமுடியாது என ஜகதீப் தன்கர், மற்றொரு எம்பியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இருக்கை வரை சென்று விவாதித்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ...

சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொள்கிறார் என அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தக் கோரி ...

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை பிரபலப்படுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இந்தப் ...