50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது என்று முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக இந்தியா மீது கூடுதலாக அமெரிக்கா வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ...
மேற்காசிய நாட்டான கத்தாருக்கு சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை இலக்காக வைச்ச இந்தத் தாக்குதல் பத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்ல (UNHRC) விவாதம் நடந்தது. அப்போ, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐ.நா. செயல்பாட்டை கண்காணிக்குற UN Watch நிறுவனத்தோட இயக்குநருமான ஹில்லெல் நியூயர், 2012-ல அமெரிக்கா பயங்கரவாத அமைப்பா சொன்ன ஹமாஸை ...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. இதனால், தமிழக அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி மற்றும் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலம் தழுவிய பயணங்களில் மும்முரம் ...
புதுடெல்லி: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘நேபாளத்தில் அமைதி திரும்புவதில், வளம், வளர்ச்சியை உறுதி செய்வதிலும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது.’ என்று தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் ...
திருச்சி மரக்கடை பகுதி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு நடந்த பல அரசியல் கூட்டங்கள், அந்தந்த காலத்தின் அரசியல் மாற்றங்களுக்கும், தலைவர்களின் எழுச்சிக்கும் சாட்சியாக இருந்துள்ளன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் ஆகியோரின் அரசியல் வாழ்வில் இந்த இடத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. 1972-ல் தி.மு.க.விலிருந்து ...
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மாவட்டத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் தொண்டர்கள் விதிகளை மீறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரது முதல் பரப்புரை திருச்சி மாவட்டம் ...
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஏர்போர்ட் வந்த அவருக்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் விஜய்க்கு அனுமதி கொடுத்த நிலையில் தற்போது விஜய் பிரச்சார வாகனத்தில் மரக்கடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ...
மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையும் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் 3 சுற்றுகளாக நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது ...
தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை அண்மையில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார். அந்த நாள் முதல் தற்போது வரை, அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதனிடையே, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ...
நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமானுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். காவல்துறையினரின் ...













