கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் ...

கே-ரயில் திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். கேரள அரசு கே-ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அதிவேக ரயில் மூலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 529.45 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணிநேரத்தில் பயணிக்கலாம். இந்த திட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் ...

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய ...

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. ராகுல் காந்தி நூலை வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்நூலில் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள், இளமைப்பருவம், ஆரம்பநிலை அரசியல் பங்களிப்பு, திருமண ...

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அதிமுக ...

சென்னை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்: அசோக்குமார் (அதிமுக): இதுவாக்கு ஜாலம் கொண்ட பட்ஜெட். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்கள். அது பட்ஜெட்டில் இல்லை. அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகளை பாதுகாத்து கண்காணிக்க ...

ஜே & கே இன் மகாராஜா ஹரி சிங்கின் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்கின் மகனுமான முன்னாள் ஜே & கே எம்எல்சி விக்ரமாதித்ய சிங் செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளை ...

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களின் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகிற மாா்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 96 வாா்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும் வெற்றி ...

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்படாமல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் கோர்ட் அனுமதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அனைத்து பதவிகளுக்கும் பாண்டவர் அணி தான் முன்னிலையில் இருந்தது. இறுதியில் அந்த அணியை சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி என அனைவரும் வெற்றி பெற்றனர். நீதி, ...

சென்னை: தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் வழங்க முடியாது என போக்‍குவரத்துறை ​அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை ...