வால்பாறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சரிடம் மனு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட அனைத்து கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை  துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வால்பாறை நகராட்சி நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.செந்தில்குமார் வால்பாறை நகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதற்கான மனுவை அமைச்சரிடம் அளித்தார் அப்போது வால்பாறை நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.