இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடத்தப்படாத நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இதுவரை இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ...
அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மோதல் நிலவி வருகிறது. இதனால், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளார். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சட்ட ரீதியாக தீர்வு காணப்படாததால், சபாநாயகர், பன்னீர்செல்வத்துக்கு இடையூறு ஏற்படாமல், ...
தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நேரலை ...
ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பா.ஜ.க மகளிர் அணியினர் கைது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகின்றார். பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு ...
ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு ...
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது… எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று ...
20ம் நூற்றாண்டில் உலகில் உள்ள பிற மக்களுக்கு கிடைத்த அடிப்படை வசதிகள் கூட, குஜராத்,இமாச்சலப்பிரதேச மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட முன்பு இருந்த அரசு வழங்கவில்லை என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார். இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறையும் பாஜக ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக ...
நமது அரசு 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டு தேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. எல்லா வீடுகளுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கியுள்ளோம் – என இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பெருமிதம். இந்தியாவில் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று இமாச்சல பிரதேசத்தில் ...
சென்னை : பாஜக நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழகம் திரும்பிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். முன்னதாக, பாஜக நிர்வாகிகள், பத்திரிகையாளரை தாக்க முயன்ற சம்பவம் ...
முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மதுரையில் நிதியமைச்சர் தியாகராஜன் சார்பாக கட்சியினருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி நகர செயலாளர் தளபதி 9 பகுதி செயலாளர்கள் 52 வட்டச் செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் புறக்கணித்தனர் அமைச்சரை சார்ந்த மத்திய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பெரும்பாலும் பங்கேற்றார்கள். இதன் ...













