சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று வழங்கிய தீர்ப்பு: ஜூலை 11ல் ...
இதற்கு முன் அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் பேட்டி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவர் பேசுகையில், எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அவற்றை மனதில் இருந்து அப்புறப்டுத்தி ...
மத்திய அரசு மக்களுக்கு நன்மை செய்யும் ஒரு அரசாகவே இருந்து வருகின்றது. இதற்கு ஒரு முக்கிய ஒரு ஆதாரம் உதாரணமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மேக் இன் இந்தியா திட்டம் என்பதை குறிப்பாகச் சொல்லலாம். ஏனெனில் இந்த திட்டம் என்பது உள்நாட்டிலேயே நம்முடைய வளங்களை பயன்படுத்தி நமக்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்யும் ...
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதுகுறித்து அதிமுக தொண்டர்களுக்கு ...
ரஜினியின் டெல்லி விசிட், அதன் பின்னர் தமிழக ஆளுநருடான சந்திப்பும் தமிழக அரசியலில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி உறுதியாக சொல்லி விட்டதால் இந்த முறை ரஜினியை அரசியலோடு இணைத்து அவ்வளவாக பேச்சு எழவில்லை. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று அவர் சொன்னதுதான் சலசலப்பை ஏற்படுத்தின. ரஜினி அரசியலுக்கு வர ...
சமீப காலமாக, ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் ...
டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் நீட் தேர்வு விலக்கு உட்பட தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பிரதமரிடம் வழங்கி ஏற்கனவே அது தொடர்பாக முன் வைத்த கோரிக்கைகளை நினைவூட்டினார் ஸ்டாலின். ...
தமிழகத்ததிலிருந்து குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து, அண்டை மாநிலமான கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் கருங்கற்கள், கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. குறைந்த அளவு கருங்கல் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு அதிகமான, கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பறிபோகின்றன. பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூரில் இருந்து, திருச்சூருக்கு ...
சென்னை: எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ...
நியமனம் செய்த சில மணி நேரத்திலேயே பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்- அதிர்ச்சியில் காங்கிரஸ்..!
காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ...