நாடு முழுவதும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குகிறது. முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் ...
அதிமுக பொதுக்குழு குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். திமுக பொதுக்குழு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுகுழு கூட்டம் செல்லும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் ...
கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரது பெற்றோர்கள் சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனிடையே, மாணவி மரண வழக்கில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்த மீன் வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று துவக்கி வைக்க வந்திருந்தார்.அப்போது,அவர் தனியார் ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பின்னர்,அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது,அவர் தமிழக முதல்வர் என்பவர் அனைவருக்கும் சமமானவர்.பொதுவானவர்.திமுக ...
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் : பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை ஸ்மார்ட் சிட்டி: பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள குளங்களை மாநகராட்சியினர் தூய்மைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம் பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திருவனந்தபுரம் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவருக்கு’திராவிட மாடல்’ புத்தகத்தை ஸ்டாலின் வழங்கினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 3) தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ...
அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நீதிபதிகள் துரைசாமி ...
சென்னை: விருதுநகரில் செப்டம்பர் 15ல் நடக்கும் நிகழ்ச்சியில் 2022ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுபவர்களின் பெயர்களை திமுக அறிவித்துள்ளது. திமுகவின் தாய் கழகமான திராவிட கழகத்தை நிறுவியவர் பெரியார். திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. ...
கொச்சி:கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,2) நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார்.கடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ‘வார்ஷிப் டிசைன் பீரோ’ என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் ...
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஏ1 குற்றவாளியாகவும், சசிகலா ...