பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை அதிமுக முன்னாள் முதல்வரும், அ திமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ரோப்கார் மூலம் மலைக்கு வந்த அவர் சாயரட்சையில் கலந்து கொண்டு சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேருக்கும் பணம் செலுத்தி வடம் பிடித்து ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பணியாற்றுவது தான் மிகப்பெரிய வலிமையாக இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய ‘தி இந்தியா வே: ஸ்ட்ரேட்டஜிஸ் ஃபார் அன்செர்ட்டய்ன் வேர்ல்ட்’ (The India Way: Strategies for an Uncertain World) என்ற ...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் ...
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படும் அசோக் கெலாட் மற்றும் சசிதரூர் திடீரென சந்தித்து பேசியிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 17-ம் தேதி நடக்கவிருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரம் ...
கோவை: 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்டத்தில் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் 2 வருடம் 4 மாதம் ...
புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மங்கோலியா, ஜப்பான் நாடுகளுக்கு செல்லவுள்ளார். இன்று புறப்படும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மங்கோலியாவில் தங்கியிருப்பார். அப்போது மங்கோலிய அதிபர் குரேல்சுக், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சைகான் பயார் உள்ளிட்டோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் ...
டெல்லி: பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் , அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ...
தொழிற் கல்விக்கு மூடு விழா நடத்த தி.மு.க. அரசு முயற்சிப்பது வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டது, அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தை கைவிட்டது, அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, ...
ஆசிரியா் தினத்தை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: நமது ஆசிரியா்களுக்கு மரியாதையும், பயபக்தியும் செலுத்துவது பழங்கால இந்தியாவின் பழக்க வழக்கமாகும். ஆசிரியா்கள் நமது சமூகத்தின் முன்மாதிரியாளா்களாகவும், ஊக்கப்படுத்துபவா்களாகவும் இருக்கிறாா்கள். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியா்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். முதல்வா் மு.க.ஸ்டாலின்: நாட்டின் எதிா்கால ...
தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டு தெரிவித்தும் விருந்தினர்களாக சென்ற தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி தெரிவித்தும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் ...