கோவையில் கைப் பற்றியது 1.5 டன் வெடிப் பொருள் – பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்!!!

கோவையில் கைப் பற்றியது ஒன்றரை டன் வெடிப் பொருளா? – தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!!!

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது என்பதை கார் வெடிப்பு சம்பவம் காட்டியுள்ளது. 1998 ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் போல, மீண்டும் நடக்க இருந்த சம்பம் அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடன் டி.ஜி.பி வந்ததை வரவேற்கிறோம். ஆனால் முதற்கட்ட விசாரணை கூட முழுமையாக செய்யாமல் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது என அறிக்கை விட்டது பொறுப்பான செயல் அல்ல. அவர் ஏன் வெடித்தது என்பதில் கருத்தை செலுத்தி இருக்க வேண்டும். இதில் உயிரிழந்த நபரை முழுமையாக கண்காணித்து இருக்க வேண்டும். அவரை உளவுத் துறையினர் கண்காணித்து வந்த நிலையில், இடையில் அது தோல்வியடைய என்ன‌ காரணம்?. 3 நாட்களுக்கு பிறகு தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல இன்று முதல்வர் அறிக்கை விட்டுள்ளார்.
பி.எப்.ஐ அமைப்பினர் பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர். அதனை தி.மு.க அரசு கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தால் இதே போல செய்ய தைரியம் வந்திருக்காது. இஸ்லாமிய பயங்கார வாதத்தை தி.மு.க அரசு கண்டு கொள்ளவில்லை. ஓட்டு மட்டுமே குறி. சமூகத்தின் மீது அக்கறை இல்லை. இவ்விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்காரவாததை வேரோடு அழிக்க வேண்டும். காவல் துறையில் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
டி.ஜி.பி அவசர கோலத்தில் அறிக்கை தர தி.மு.க அழுத்தம் தான் காரணம். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி 1.5 டன் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. உண்மையை மூடி மறைக்காமல் வெளிக் கொண்டு வர வேண்டும். முழுமையாக பயங்காரவாதத்தை அழிக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொடர்புகளை மாநிலத்தை தாண்டியும் இருப்பதால் முழுமையாக கண்டறிய, என்.ஐ.ஏ. உடன் அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க சார்பில் கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசின் மெத்தனப் போக்கையும், பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டுமென்ற எண்ணத்தை கண்டித்தும், கோவையை பயங்கரவாதிகளிடம் இருந்து காக்க வேண்டுமென்பதற்காக வருகின்ற 31 ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் பந்த் நடத்தப்படும். நல்ல உள்ளம் கொண்டவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். தி.மு. க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.