கோவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு கோவை வருகிறார். பின்னர் இரவு கோவையில் தங்குகிறார். மறுநாள் 25-ந் தேதி காலை நேரு ஸ்டேடியத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓடு தள பாதையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் மாலை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சரான ...

கோவை: மன உறுதி காக்கும் மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு என்னும் மனநல சேவையை மருத்துவ மாணவர்களுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மன அளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதனை முதல்அமைச்சர் சென்னை, ...

சென்னை: அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ...

சென்னை: சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் BF 7 எனும் ஒமைக்ரான் திரிபு வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் 1.48 லட்சம் பேருக்கு கரோனாத் தொற்று ...

புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்படி, டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. சீனா, ஜப்பான் உள்ளிட்ட ...

டெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கோவிட் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மக்‍களை ஒன்றுதிரட்டும் வகையில் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் குமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ...

சென்னை: “அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் எந்தக் காலக்கட்டத்திலும் அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும், ‘கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை அதிமுக இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது’ என்று ...

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மரபணு சோதனை ஆய்வகம் மூலம் கொரோனா மரபணு மாற்றம் குறித்து கண்காணித்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் பயனாளிக்கு தமிழக முதல்வர் மருந்து பெட்டகம் வழங்க உள்ளதை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வு ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக்குப் பின் எந்த ஒரு சூழலையும் சமாளித்திட தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் சடலங்களை எரிக்க மயானங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா மற்ற ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகளும் தி.மு.க வசம் உள்ளன. பத்மநாபபுரம் நகராட்சி சேர்மனாக அருள்சோபன் இருக்கிறார். துணைத் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த மணி சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. ...