பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.1.25லட்சம் கோடி கறுப்புப்பணம் மீட்கப்பட்டுள்ளது, ரூ.4,600 கோடி முறைகேடான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எந்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாக முறை குறித்து டெல்லியில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் ...

திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம். திமுக அரசை கண்டித்து சேலம் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பால்விலை, சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசை கண்டித்து மாநகராட்சி நகராட்சிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ...

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்க, பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜா பட்டேரியாவை மத்தியப் பிரதேச போலீஸார் இன்று கைது செய்தனர். தாமோ மாவட்டத்தில் உள்ள ஹதா நகரில் உள்ள அவரின் வீட்டில் ராஜா பட்டேரியா இருந்தபோது இன்று அவரை ...

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக ...

சென்னை: டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய அளவிலான நதிநீர் இணைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார். தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டத்தில், மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – காவிரி – வைகை – குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டங்களை செயல்படுத்தும்படி, மத்திய ...

கோவை : தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், போதைப் பொருட்களை ஒழித்திடவும் வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் கோவை சிவானந்தா காலனி பவர் அவுஸ் அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொங்கு ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கோரியும் அதன் தலைவர்கள் திருமாவளவன் மற்றும் வன்னியரசு ஆகியோரை கைது செய்ய கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் கோவை மாவட்ட தலைவர் வி.வி.மாணிக்கம் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் விடுதலை ...

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள வள்ளியம்மன் கோவில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெறுகிறது. அதனையோட்டி அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அதிமுகவை சேர்ந்த திவாகர், என்பவரை பேனர் வைப்பதில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் நடைப்பெற்று பின்னர் ...

கோவை குறிச்சி குளத்தில் படகு சவாரி இயக்குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன, குறிச்சி குளத்தில் சைக்கிள் ...

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டு அமைச்சராக்க பரிந்துரை ...