ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் அறிக்கை.. 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2 ஆண்டுகள் ...

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநருக்கு தமிழக அரசு நேற்று அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, அக்.19-ம் ...

சென்னை: குஜராத்தைப் போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது: வானதி சீனிவாசன் (பாஜக): கோவையில் சாலைகள் மோசமாக உள்ளன. மக்கள் பெரிதும் அவதிப்படுவதால், சாலைகளைச் ...

காமராஜர் புகழை களங்கப்படுத்தும் வகையில் பேசிய தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியைக் கண்டித்து, நாடார் சங்க அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தலைவர் காமராஜரின் புகழை களங்கப்படுத்தும் வகையிலும், நாடார் சமூக பெண்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது ...

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் ...

அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி ...

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வயநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ‘கறுப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ‘அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?’ என்று பேசியதாக ...

உடலை உருக்குலைய வைத்து, அசந்தால் உயிருக்கே உலை வைக்கும் கொடுமையான நோய் காசம். ஒவ்வொரு ஆண்டும் உலக காச நோய் தினம் மார்ச் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, முழுவதும் பாதிப்பான நிலை என மூன்று வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் நுரையீரல், சிறுநீரகம், ...

ஜி20 செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 பிரதான நாடுகள் கொண்ட ஜி20 மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது . அதே போல, ...

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக – பாஜகஇடையேயான கூட்டணி உரசல் நீடித்துவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு ...