மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பென்சில், ஷார்ப்னர் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமைக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார். மாநிலங்களுக்கான ஜூலை மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 16 ஆயிரத்து 982 கோடி இன்றே விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார். ஜிஎஸ்டி தீர்ப்பாயம் தொடர்பான அறிக்கைக்கு சில மாற்றங்களுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
Leave a Reply