விழுந்து விழுந்து வேலை செய்தால் செய்தி ஆவதில்லை.. ஆனால் நான் கீழே விழுந்தால் பெரிய செய்தியாக வருகிறது- கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ருசிகர பேச்சு..!

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பணியாளர்கள் தினத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, கல்லூரியில் ஜி.ஆர்.டி பிறந்த நாளை பணியாளர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். எனது மகன் சுகநாதன், மருமகள் திவ்யா ஆகியோரும் இங்குதான் பணியாற்றி வருகிறார்கள். அதனால் நானும் இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான். தேசிய கீதத்தை 1950 ம் ஆண்டுதான் நாடு அங்கீகரித்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கீதத்தை கல்வி படமாக இந்த கல்வி நிறுவனம் அங்கீகரித்தது.
தொழில்கல்வியை தமிழகத்தில் கொண்டுவர தமிழை தூக்கிப் பிடிக்க நினைத்தவர்கள் கூட தொழில்கல்விகள் தமிழை புகுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் தமிழை தொழில் கல்லூரியில் கொடுத்து உள்ளது. வேதியியல் பாடத்தை தமிழில் முதன் முதலில் சொல்லிக் கொடுத்தது இந்த கல்லூரி தான். பணியாளர்கள் தங்கள் வேலையை நிறுவனத்துடன் ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டும்.
பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்களை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
பிரணாண்டாசா ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அடுத்த மாதம் தனது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். இல்லையென்றால் செய்வதே வேரை என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அடுத்த மாதமும் அவருக்கு சம்பளம் உயர்த்தி வழங்கவில்லை. மீண்டும் கடிதம் எழுதினார். அதிலும் சம்பளத்தை உயர்த்தி தரவில்லை என்றால் செய்வதே வேரை என குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த உரிமையாளர் பிரணாண்டாசாவை பார்த்து என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு அவர் இங்கே தான் வேலை செய்வேன் என்றார். அந்த அளவுக்கு அவருக்கு சம்பளத்தை விட வேலையில் விருப்பம் இருந்தது.
இதை சொல்வதால் உங்கள் நிறுவனத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை.
நான் ஒரு சி ஓ.கள் பங்குபெற்ற 4 நாள் மாநாட்டிற்கு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் சரியான வேலைக்கு சரியான பணியாளரை தேர்ந்தெடுப்பது எப்படி என கேட்டனர். அதற்கு நான் ஒரு உதாரணம் கூறினேன். எனது வீட்டில் டிரைவர் மற்றும் சமையல்காரர் 10 வருடங்களாக வேலை செய்து வருகிறார்கள். ஆனால் மற்ற இடங்களில் 6 மாதங்கமாதங்கள் தான் வேலையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்குக் காரணம் எனக்கு தோசை பிடிக்கும் என்பதால் தோசையை செய்ய சமையல்காரையை வற்புறுத்தாமல் அவரக்கு தெரிந்த இட்லியை அருந்த பழகிக் கொண்டேன். காரில் வேகமாக செல்வது பிடிக்கும் என்பதால் ஓட்டுநரை வேகமாக காரை ஓட்ட சொல்லாமல் அவருக்கு பிடித்தமாறு மெதுவாக ஓட்டட்டும் என்று விட்டுவிட்டேன். அதனையும் பழகிக் கொண்டேன். இதனால் பணியாளர்கள் நிரந்தரமாக உள்ளார்கள். இதனைக் கேட்ட அவர்கள் முதலில் இது தெரிந்திருந்தால் இந்த 4 நாட்கள் மாநாடு தேவைப்பட்டு இருக்காது என்றனர். தற்போது உள்ள பேராசிரியர்கள் கூகுள் உடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது.
ஒரு மாணவி 10 பதக்கங்களை வென்று இருந்தார் அவரிடம் இந்த பதக்கங்களை யாருக்கு சமர்ப்பிர்கள் என்று கேட்டதற்கு கூகுளுக்கு தான் சமர்ப்பிப்பேன் என்றார். அந்த அளவுக்கு கூகுள் வளர்ந்து விட்டது.
எனவே பேராசிரியர்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். நான் பேராசிரியராக இருக்கும்போது கடைசி பெஞ்ச் மாணவர்களை மட்டுமே கவனத்தில் கொள்வேன். மகாபாரதத்தில் கர்ணன் வண்டு வந்து துளைத்த போதும் ஆசிரியர் மடியில் இருப்பதால் அப்படியே அமர்ந்திருந்தார். இதனை எனது மாணவரிடம் கேட்டபோது நானும் அவ்வாறு தான் செயல்படுவேன். இல்லையென்றால் நீங்கள் மீண்டும் எழுந்திருத்து பாடம் நடத்துவீர்கள். அதனால் அதை செய்ய மாட்டேன் என கூறினார். மேலும் நாம் அனைவரும் யோகா கற்றுக் கொள்ள ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வரும்போது ஒரு பெரியவர் என்னிடம் இரண்டு செல்போன்கள் எப்படி வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் இரண்டு மாநிலத்தையே சமாளிக்கிறேன் இரண்டு செல்போனை சமாளிக்க முடியாதா என்றேன். அதேபோல் தான் அனைவரும் பணியாற்ற வேண்டும். நான் 48 மணி நேரம் வேண்டுமானாலும் தொடர்ச்சியாக பணியாற்ற தயாராக உள்ளேன். நான்
விழுந்து விழுந்து வேலை செய்யும் போது அது செய்தி ஆவதில்லை ஆனால் விழுந்தால் பெரிய செய்தி ஆகிறது.
எல்லா மாநிலங்களும் பணியாளர்கள் தினம் கொண்டாட வேண்டும். பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, பணியாளர்கள் தினம் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும், அந்த எண்ணம் தற்போது தோன்றுகிறது. மாநிலங்களில் அதை அமல்படுத்த திட்டமிருக்கிறது. கவர்னர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஜனாதிபதி, உள்துறை அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அமைச்சகம் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் எங்களை அடையாளம் கொண்டுவந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கினால் மத்திய அமைச்சர் ஆவோம். மத்திய அமைச்சகம் எங்களை அங்கீகரித்து எங்கள் திறமையை வீணடிக்க வேண்டாம் என கவர்னர் ஆக்கி உள்ளது. எங்களைப் போன்றவர்கள் திறமை மிக்கவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இதைச் சொன்னால் அது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும். மக்கள் திறமையானவர்களை கண்டு கொள்ள வேண்டும் என்பதை எனது கோரிக்கை, வடமாநில தொழிலாளர்கள் யார் அங்கீஅங்கீரார்கள். அதை அறிந்து கொண்டு அதன் பின்னர் கருத்து கூறலாம் என்றார்.