சென்னை: தமிழக அரசின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒருவழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ...
சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். ...
சென்னை: ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.10) நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு ...
அதிமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அரசினர் தீர்மானம் உள்ளது; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித்தலைவரை போலவே எதிர்க்கட்சித் ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, “நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் நரேந்திர மோடி தலைமையிலான ...
பெங்களூரு: கர்நாடகாவில் ‘புலிகள் திட்டத்தின்’ பொன்விழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள புலிகள் குறித்த எண்ணிக்கை கணக்கெடுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார். அதேபோல புலிகள் மட்டுமல்லாது மற்ற பெரிய பூனை இனங்களான ‘புலி-சிங்கம்’ இனத்தையும் காக்க புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார். ஒவ்வொரு காடுகளிலும் இயற்கையாகவே உணவு சங்கிலி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த உணவு சங்கிலியின் ...
ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார். பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜீவா அரங்கத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி தூய்மைக்காவலர் சங்கத்தின் கூட்டம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான சுந்தரம் தலைமையி்ல் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மாவட்ட சங்க நிர்வாகி சக்திவேல் வரவேற்றார். திடக் ...
சென்னை : கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பிஸியாக இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 5 மாவட்டங்களுக்கு புதிதாக பார்வையாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மாநில ...
சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களின் வேலை நேரம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணி முதல் செயல்படத் தொடங்கும். தற்போது காலை 9 மணியிலிருந்து ...













