ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதன் பின்னர் மசோதா மீதான விவாதம் தொடங்கியது. அனைத்துக் கட்சி சார்பிலும் ஒருவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். அப்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ...

திமுகவில் உதயநிதி தரப்பிற்கும் கனிமொழி தரப்பிற்கும் தற்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி காரணமாக மோதல் அதிகமாக வெடித்துள்ளது. திமுகவில் தற்போது தலைவர் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின்  தங்கை கனிமொழி மகளிர் அணியை நிர்வகித்து வந்தார், மேலும் அவர் அதிகமாக உழைத்து மகளிர் அணியை உருவாக்கியவர் என திமுகவினரால் பாராட்டப்பட்டு வந்தவர், தற்பொழுது துணைப் பொதுச் செயலாளர் ...

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” ...

சென்னை: கிருஷ்ணகிரி கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ...

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் ...

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று எதிர்பாராத விதமாக ...

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த அமைப்பின் அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. அப்பொழுது தடை விதிப்பை கண்டித்து கோவையில் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ...

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கடந்த இருதினங்களாக தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, நாளை முதல் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி வரும் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்.21-ம் தேதி வரை துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ...

சென்னை: உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளி யிட்ட வாழ்த்துச் செய்திகள்: ஆளுநர் ஆர்.என். ரவி: உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, மக்களுக்கு, குறிப்பாக தமிழகத்தில் ...

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. அதில் இந்தியா முழுவதும் ...