விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டம் – ஜோதிர் ஆதித்ய சிந்தியா..!

டெல்லி-தர்மசாலா-டெல்லி வழித்தடத்தில் இண்டிகோஜோதிர் ஆதித்ய சிந்தியா  விமான சேவையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- சிவில் விமானப் போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை 9 ஆண்டுகளில் செய்துள்ளோம்.

148 விமான நிலையங்கள், நீர் ஏரோட்ரோம்கள், ஹெலிபோர்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 3-4 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். கடகோடியில் உள்ள முக்கிய பெருநகர விமான நிலையங்களுக்கும் சிறிய விமான நிலையங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்படும். தர்மசாலா விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். இதற்காக 2 கட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக தற்போதுள்ள ஓடுபாதை 1900 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும். இரண்டாவது கட்டத்தில், ஓடுபாதை 3110 மீட்டருக்கு நீட்டிக்கப்படும். இதனால் போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 விமானங்கள் தரையிறங்க முடியும். சிம்லா விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மண்டியில் பசுமை விமான நிலையத்திற்கு தள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முழுமையான ஜனநாயகமயமாக்கலைக் கண்டுள்ளது, மேலும் விமானங்கள் பறப்பதை மட்டுமே பார்க்கக்கூடிய மக்கள் கூட இன்று பறக்கிறார்கள். 2013-14 ஆம் ஆண்டில், ஹிமாச்சல பிரதேசத்தில் வாரத்திற்கு 40 விமானங்கள் இருந்தன. தற்போது 9 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. தர்மசாலாவில் 28 வாராந்திர விமானங்கள் தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.