ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவேரி நதிநீர் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், தமிழ் நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாகவும் ...

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு பெருநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ...

கலிபோர்னியா: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்காவின் கலிபோர்னியா கூட்டத்தில் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் முழக்கமிட்டனர். ஆனால் ராகுல் காந்தி கோபப்படாமல் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்த விமர்சனத்துக்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ...

கரூரில் மின்துறை மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கிய ரெய்டு 6வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில் இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒப்பந்ததாரர் வீட்டில் நடைப்பெற்ற ரெய்டில் அள்ள அள்ள பணம் சிக்கியுள்ளது. அந்த பணத்திற்கான கணக்கு கேட்கையில், ...

நாட்டின் ஏழைகளை தவறாக வழிநடத்துவதை காங்கிரஸ் கட்சி கொள்கையாக கொண்டிருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தியாவில் 9 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதை, நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ...

என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியது எனக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த ஒரு சிலரது ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்த தகவலின்படி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ...

 சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளா கத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டுள்ளது. இம்மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, ...

மதுரையில் நடக்கும் மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ”திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய எதுவுமே பொய்தான். CSK அணியை அனைவருக்கும் பிடிக்கும் அதில் டோனி இருப்பதால். CSK ...

மேகதாது அணை திட்டத்தை தொடங்குவதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.. கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார். பெங்களூருவில் உள்ள ...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 22வது உச்சிமாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காணொலி முறையில் நடைபெற இருக்கிறது. இந்த உச்சி மாநாட்டை ஜூலை 4ம் தேதி இந்தியா நடத்துகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று நடந்த சமர்கண்ட் உச்சிமாநாட்டில் எஸ்சிஓ-ன் சுழற்சித் தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதன்படி, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், ...