தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் ...
ஈரோடு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ...
தமிழ்நாட்டில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவலான ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சில அமைச்சர்கள் நீக்கப்படுவர் எனத் தகவல் வெளியானது. இது அரசியல் ...
கர்நாடகத்தில் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.. கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். ...
சேலம்: வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்த புகாரின்பேரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த சேலம் போலீசார் ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மிலானி. இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘எடப்பாடி சட்டமன்ற ...
கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மே 7-ம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘திராவிடம் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதியாக்கிய ...
மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வெடித்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், இந்த கலவரத்தில் 55 பேர் உயிரிழந்தனர். மேலும், ...
மதுரை மாவட்டத்தில் 22 அரசு பள்ளிகள் உட்பட 132 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது மிகந்த மகிழ்வுக்குரியது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் +2 தேர்வெழுதிய 34751 பேரில் 33304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.6% மாணவிகள் 98% பேர். ...
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 8) தொடங்கிவைத்தார். இந்த விழாவின்போது, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சினை உள்ளிட்டவற்றையும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் ...
அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரை அமைச்சர் பொன்முடி அவரது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, ...












