தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு கவர்னரை சந்தித்தும் புகார் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் ...

இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். ...

அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜப்பானில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக ஒசாகா மாகாணத்தில் ...

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்கள், குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது தினமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வருமான வரி சோதனைக்கு பல்வேறு இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமானவரித்துறை ...

புதுடெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமைகளில் உரையாற்றி வருகிறார். நேற்று நடந்த 101-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நிறைவு செய்து, 2-வது சதத்தை தொடங்கியுள்ளோம். மக்களின் பங்களிப்புதான் இந்நிகழ்ச்சியில் மிகப் பெரிய ...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவின்படி நேற்று ராகுலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு குறுகிய கால பாஸ்போர்ட் ஒன்று வழங்கப்பட்டதையடுத்து இன்று மாலை அவர் அமெரிக்கா செல்கிறார். ஜூன் 4ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் பேரணியில் ராகுல் பங்கேற்கிறார். மேலும், ...

தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ...

கோவை மாவட்டத்தில் கோல்டுவின்ஸ், தொண்டாமுத்தூர், பனப்பட்டி, தம்மம்பதி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 7 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 26 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதில் தம்மம்பதியிலுள்ள அரவிந்த் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு, தொண்டாமுத்தூரில் அவரது மனைவி காயத்ரிக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சோதனை நடந்தது .அப்போது மையத்திலிருந்து கணினியில் ...

சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு திமுக ...

சென்னை: நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்கு என்ன தொடர்பு எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். கல்லால் குழும நிறுவனத்தில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் போர்ச்சுக்கல் நாட்டைசேர்ந்த நிறுவனத்தை கல்லால்நிறுவனம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தில் இயக்குநர்களை ...