கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் தொடர்ந்து 3 -வது நாளாக வருமான வரி ரெய்டு..!

கோவை மாவட்டத்தில் கோல்டுவின்ஸ், தொண்டாமுத்தூர், பனப்பட்டி, தம்மம்பதி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட 7 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 26 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதில் தம்மம்பதியிலுள்ள அரவிந்த் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீடு, தொண்டாமுத்தூரில் அவரது மனைவி காயத்ரிக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் சோதனை நடந்தது .அப்போது மையத்திலிருந்து கணினியில் பதிவாகியிருந்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து சென்றனர் .இந்த நிலையில் 3 -வது நாளாக நேற்று பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் ரேஸ்கோர்ஸ் உள்ள அரவிந்த் காயத்ரி தம்பதிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு, பனப்பட்டியில் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியிலும் சோதனை நடந்தது.