இன்று அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.

புதுடெல்லி: நீதிமன்ற உத்தரவின்படி நேற்று ராகுலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு குறுகிய கால பாஸ்போர்ட் ஒன்று வழங்கப்பட்டதையடுத்து இன்று மாலை அவர் அமெரிக்கா செல்கிறார்.

ஜூன் 4ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் பேரணியில் ராகுல் பங்கேற்கிறார். மேலும், கலிபோர்னியாவின் வாஷிங்டனில், குழு கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றிலும் பங்கேற்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, ராகுல் தனது பாஸ்போர்ட்டை திருப்பி கொடுத்துவிட்டார். தற்போது, அவருக்கு வழக்கமான 10 ஆண்டு பாஸ்போர்ட்டை கிடைக்கவில்லை என்றாலும், மூன்று ஆண்டு கால அவகாசமாக சாதராண பாஸ்போர்ட் நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி அவர் கூறியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.