அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஓமதூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இதய அடைப்பு எனது ...

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.   தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த வகையில் ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதை உக்கடத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (வயது 42) என்பவர் வாடகைக்கு எடுத்து ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் நடத்தி வந்தார்.இந்த அலுவலகத்துக்கு கடந்த 17-ந்தேதி இரவு யாரோ 4 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று ...

தஞ்சாவூர்: பாஜக – அதிமுக உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 9-ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 23) இரவு நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் ...

வாஷிங்டன் : பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று ...

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மோசடி வழக்கில் கைது செய்யபட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.. கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) தலைவர் கே சுதாகரன், மோசடி வழக்கு தொடர்பாக, சுமார் 7 மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் ...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள தாக பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் ...

இந்தியாவில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது அங்கு சுவையான இட்லி பரிமாறப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ...

கோவை;கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பா.ஜ., கவுன்சிலர் 15 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு 18 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஊரக உள்ளாட்சிகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் 17 பேரும் சேர்ந்து, 5 உறுப்பினர்களை தங்களுக்குள் தேர்வு செய்ய ...

தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் ...