கோவை: பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் கோவையில் இன்று தொடங்கின. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடப்பதை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஆணையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். கோவை தெற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் ...
டெல்லி: அமைச்சரவை மறுசீரமைப்பு விரைவில் நடைபெறலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, விஷன் 2047க்கான பணிகள் பற்றிப் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற ...
பாரதிய ஜனதா கட்சி-சிவசேனா ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் மற்றும் 8 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க மனு தாக்கல் செய்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். துணை முதல்வராக பவார் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்களான 8 ...
மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது, சட்டப்படியும் அது முடியாது அணை கட்டி விடுவோம் என்று கூறுவது கர்நாடகாவின் அரசியல் ஸ்டன்ட் என்று நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை: மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசுமுறைப் பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ...
சென்னை: சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி கடந்தாண்டு ...
பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே. சி. தியாகி ஞாயிற்றுக்கிழமை கூறினார்,.”நம்பிக்கையுடன், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு கூட்டப்படும்” ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு மேலே, இன்று அதிகாலை ஆளில்லா விமானம் பறந்ததாக வெளியான தகவலை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் இல்லத்தின் மீது அதிகாலை 5 மணியளவில் ஆளில்லா விமானம் காணப்பட்டதாக ...
வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் அறை வழங்க கடந்த 23ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் ...
அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக வந்த பரபரப்பு புகார்- அமைச்சர் விளக்கம்..!
சென்னையில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளளிடம் கூறியதாவது:- செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுந்துள்ளது. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன. கையில் ஊசி செலுத்தியது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். ...













