சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அமைச்சர் அறிவிப்பு.!!

சென்னை: சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.