பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு – என்ன காரணம்..?

பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே. சி. தியாகி ஞாயிற்றுக்கிழமை கூறினார்,.”நம்பிக்கையுடன், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு கூட்டப்படும்” என்றார். இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பீகார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை 10 முதல் 14 வரை) மற்றும் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத் தொடர் (ஜூலை 3 முதல் 14 வரை) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெங்களூரு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது..