தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆக.25-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்முருகன் மனைவி முனியசெல்வி (29) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோபிசெட்டிபாளையம் ஆர்டிஓ திவ்யபிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டு உடனடியாக தீர்வு ...
லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்கள் நியமனங்களை விரைவாக முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் தாவியவர்களால், பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்’ என, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சியின் தலைமை ...
சென்னை: ரூ3 கோடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வரவேற்பின் பின்னணியில் இருக்கும் தேர்தல் கணக்கை விவரிக்கிறது இச்செய்திக் கட்டுரை. தியாகி இம்மானுவேல் சேகரன்.. தென் தமிழ்நாட்டின் கணிசமான வாக்கு வங்கி கொண்ட தேவேந்திரகுல வேளாளர் ஜாதி போற்றி புகழ்பாடும் பெருந்தலைவர். 66 ஆண்டுகளுக்கு முன்னர் ...
பாரிஸ்: இந்தியா, பாரத் என்ற இரண்டு சொற்களிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்பொழுது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் ...
அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த பிப்ரவரி மாதம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அவதூறு பேச்சு தொடர்பாக ...
அமராவதி: ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ.550 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று ...
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார். செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் ...
ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு ...













