கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 இன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்வு நடைப்பெற்றது. ...
கோவை கணபதி, நேரு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 50)இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரகலா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் ...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் ...
வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க உள்ளார். நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் தன்னம்பிக்கை இந்தியா வேலை வாய்ப்புத் திட்டத்தை (ABRY) இந்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தத் திட்டம் மார்ச் 2024க்குள் முடிவடையும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ...
ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ...
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் ...
கோவை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகளுக்கான தடை நீங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006-ம் ஆண்டு ரேக்ளா போட்டிகளுக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிரண்டி விளையாட்டு என்றார். ...
டெல்லி: பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடக்கிறது. 3 மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி நடந்த ...
சென்னை: தேமுதிக தலைமையகத்தில் கட்சிக் கொடியேற்றி மக்களவைத் தேர்தல் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடல் டிச.29-ம் தேதி மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ...
தஞ்சாவூர்: ‘2 ஆண்டு கால ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்,” என அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இறைவன் சக்தி பெற்று, அதிமுகவை காத்து வருகின்றனர். யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள் ...













