கோவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,கடந்த இரண்டு தினங்களாக கோவையில் நடந்த அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும்,தொழில் முனைவோர் சந்திப்பு, பாஜக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் என தொடர் நிகழ்வுகளில் கலந்து கொண்டு டெல்லிக்கு ...
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகின்றன. கடந்த செப். 3-ம் தேதி ...
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசும் போது, டிரம்ப கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக சலுகைகளை அள்ளி வழங்கியதாக கூறினார். அப்போது டிரம்ப் பேசுகையில், கமலா ஒரு ...
சிகாகோ: ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு பின்வருமாறு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 ...
பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் ஆகியவற்றில் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது! ...
பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் பதவியை மாற்றுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பழைய தலைமையே தொடரும் என்று அறிவிப்பார்கள். சில மாநிலங்களில் யார் எல்லாம் மீண்டும் பதவியில் தொடரப் போகிறார்கள் ஒரு பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மாநிலத் தலைவர் பெயர் இல்லை. மேலிடத் தலைமைப் பொறுப்பாளராக அரவிந்த் மேனனை ...
1949 செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கும் திமுகவின் 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க இருக்கிறது. 75 ஆண்டுகாலமாக மக்கள் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சுயமரியாதை, தமிழினம், முற்போக்கு சிந்தனை என மக்களுக்கு தொடர்ந்து ...
இநதியாவில் குறிப்பிடதக்க பறவையாகவும் புராண கால வரலாற்றிலும் இடம் பெற்ற பறவையான கழுகுகள், நாட்டில் அழிந்து வரும் சூழலில், சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினத்தில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து துவக்கியது. கோவையில் உள்ள வஉசி பூங்காவில் கழுகு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை எம்பி கணபதி ...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370யை மீண்டும் கொண்டு வரமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு பின் ...
ஒரு சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ...













