கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதற்கான புகாரின் பின்னணியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பேரில், ...

இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 15ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ...

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று (மே 11) அர்ப்பணித்தார். இதன் தொடக்க விழாவில் காணொலி வழியாக அமைச்சர் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லிவிட் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ...

திருச்சி புத்தூர் ஈவிஆர் சாலையில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் (மரகதம், பூரணி, தரணி) ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவ்விடத்தில் சிவாஜியின் வெண்கல சிலை ...

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் (69) புதிய போப் ஆண்டவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ...

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த ...

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில்,நேற்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அண்மையில் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையாளரிடம் 13 நகர்மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றை அளித்தனர் அதில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் ஊழல், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகளை வழங்கி அதன்மூலம் பயனடைவது, நகர்மன்ற கூட்டம் சரிவர கூட்டுவதில்லை உள்ளிட்ட பல்வேறு ...

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வலுத்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் இந்தியாவுக்கு வருகை தந்து, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆதரவு தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், ...