கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒரு புகார்கொடுத்தார். அதில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், இந்நிலையில் தனது கணவர் போலியான முகநூல் கணக்கை தொடங்கி அதில் அந்தப் பெண் மற்றும் அவரது ...

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையிட சென்ற ஐடி அதிகாரிகள் மீதும், அவர்களை தாக்கியதாக கூறி திமுகவினர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர், ...

பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மூன்று நாடுகளிலும் அவருக்கு அந்நாட்டு தலைவர்களும், அங்கு வாழும் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியா திரும்பினார். நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ...

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக வளர்த்து எடுக்கும் வகையில் பொருளாதார வியூகங்களை வகுப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியாவின் உயரிய கொள்கை வியூகங்களை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு நிதி ஆயோக். இந்த ...

2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக ...

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதரபாத் ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ...

பெங்களூர் : கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், டிகே சிவக்குமார், தனது ஆதரவாளரான எம்.எல்.சி ஹரிபிரசாத்துக்கு கேபினட்டில் டிக்கெட் வாங்கித்தர முயற்சித்தார். ஆனால், சித்தராமையா அதனை ஏற்காத நிலையில் டிகேஎஸ் – சிவக்குமார் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை ...

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தினம் தோறும் புதுவிதமான மோசடிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதனால் அரசு மக்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. தமிழக காவல்துறையினர் அடிக்கடி சமூக விழிப்புணர்வு சார்ந்த எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதாவது வங்கி விவரங்கள், ஆதார் விவரங்கள், உங்கள் தனிப்பட்ட முகவரி, மொபைல் போன் ...

தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட முதலமைச்சர் கோரிக்கை.. ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றுள்ள முதலமைச்சர், கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடு குறித்த காட்சி விளக்க ...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து, பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாக சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் ...