தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட முதலமைச்சர் கோரிக்கை..
ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றுள்ள முதலமைச்சர், கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார்.
தொழிற்சாலையின் செயல்பாடு குறித்த காட்சி விளக்க படத்தை பார்வையிட்டு, பின்னர் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினர். தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட அந்நிறுவனம் உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
உரிய ஆய்வுகளை மேற்கொண்டு கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதாக அந்நிறுவனம் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும், சென்னை 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
Leave a Reply