கோவையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” நிறுவனத்தின் சார்பில் “டைம்ஸ் சாதனை பிசினஸ் சாதனையாளர் விருது” வழங்கும் விழா நடந்தது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் சக்ரபாணி விருதுகள் வழங்கி கவுரவித்தார். கோவில்பாளையத்தில் உள்ள கே, எம் ‘சி’ ஹெச். மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் ...

கோவை – பொள்ளாச்சி ரயில் உள்பட 6 ரயில்களில் பாா்சல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களூரு – யஷ்வந்த்பூா் வாராந்திர விரைவு ரயில் (எண்:16540), பொள்ளாச்சி – கோவை தினசரி ரயில் (எண்: 06420), நிலம்பூா் சாலை – ...

பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடாரின் முக்கிய பகுதிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் காரிடார் முழுவதையும் 2023 மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். ...

தமிழகத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 10-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று ஆண்டுகளாகியும் மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்படாமல் உள்ளது. அத்துடன், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் மின்வாரிய ...

மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. ...

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவு நவம்பரில் 14 மடங்காக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததை கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததோடு, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி ...

கோவை: அன்னூரில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசு நிலங்களை கைகப்படுத்தும் என்று அறிவித்தது. இதற்கு அன்னூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விவசாயிகளின் நிலம் அவர்களது அனுமதி இல்லாமல் எடுக்கப்படாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார். இதனிடையே நமது நிலம் நமது போராட்டக்குழு தலைவர் குமார் ரவிக்குமார் மற்றும் ...

கோவை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைப் பெற முடியாமல் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வங்கி கணக்குடன் ஆதார் ...

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் செவ்விளநீர், பச்சை நிற இளநீர்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களான சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் தேவை ...

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில், பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி, நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று, மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக ...