கோவை : கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அறக்கட்டளை சார்பில் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.இதில் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் 25 பேருக்கு தலா ரூ 15 ஆயிரம் உதவி தொகை வழங்கபட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார் .சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.விழாவில் பங்கேற்ற போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு முன்னாள் போலீஸ் அதிகாரிகள் அறக்கட்டளை சார்பில் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளை தலைவர் வெள்ளியங்கிரி.செயலாளர் நந்தகுமார் பொருளாளர் ரத்தினம்,ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அசோக்குமார், சென்னமல்லன், இளங்கோவன், குமாரசாமி, கோபால், பழனிசாமி, கோபால்சாமி, சக்திவேல், மயில்சாமி, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அறக்கட்டளை தலைவர் வெள்ளியங்கிரி அனைவரயும் வரவேற்று பேசினார்.முடிவில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் நன்றி கூறினார்.