கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ...
சென்னை மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகரப் பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேருந்து ...
கோவையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது: சுமார் 350 கிலோ குட்கா பொருட்கள், கார் பறிமுதல் கோவையில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை புழக்கத்திலிருந்து ஒழிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தணிக்கை மற்றும் சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர். ...
கோவை மாவட்டத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை 11.64 கோடி முறை பயன்படுத்தியுள்ளதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடக்கிவைத்தார். ஆரம்பத்தில் பெண்களுக்கு மட்டுமே இருந்த ...
கோவை: தமிழகத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தில் இரண்டு வகையான மின்கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் 20 ஆயிரம் நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டன. மின் கட்டண உயர்வை கண்டித்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (போசியா) சார்பில் கோவையில் நேற்று கதவடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கோவை டாடாபாத், மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ...
கோவையில் 3 பேரிடம் ரூபாய் 58 லட்சம் வீட்டுமனை மோசடி: தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் 4 பேர் கைது கோவையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூபாய் 58 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் ...
மூட்டு தேய்மானம்: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே தீா்வு – கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் இணைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனா். இது தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு கங்கா மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் ...
கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது: கோவையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்.. கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒடுக்க மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாநகர பகுதிகளில் மட்டுமல்லாமல் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவத்தூர் பிரிவு ...
தமிழ்நாடு, கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. பெங்களூருவில் இருந்து கர்நாடக – தமிழ்நாடு எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது. இந்நிலையில், பொம்மசந்திரா முதல் ஓசூர் ...
கோவை: நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் 15 பயிற்சியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு எம்.ஆர்க் – 2, பி.ஆர்க் – 2, பி.இ, பி.டெக் ...