பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப ...

சென்னை: கொரோனா பரவல் எதிரொலி மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காணொலி காட்சி மூலமும் வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி .ஆக பணிபுரிந்து வருபவர் கே. சங்கர் . இவர் நேற்று மாலை கோவை வந்தார். போலீஸ் விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இரவில் விடிய விடிய கோவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சுற்றி வந்தார்.காவல் நிலையங்களிலும் ஆய்வு செய்தார்.அவருடன் ...

கார்களை உடைத்து உதிர்பாகங்களை விற்ற 2 பேர் கைது: குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!!! கோவையில் கார்களை அடகு வைப்பதாக நடந்த மோசடி தொடர்பாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் மோசடி செய்த கார்களை கோவை கரும்புக்கடை சாராமேடு பகுதியில் சேர்ந்த ரியாஸ் ...

இன்று முதல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, கோவை மாவட்டத்திலும் இன்று ...

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரம், ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் T.R. செந்தில் MBBS., DPH..MPH., மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். WHV மூலம் வழங்கப்பட்ட MTM மருந்து பெட்டகத்தில் உள்ள மாத்திரைகளையும், பராமரிக்கும் பதிவேடுகளை பார்வையிட்டும், ...

கோவை போலீஸ் கமிஷன்ர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான மன நலம், உடல் நலன் , மேம்படுத்தும் யோகா பயிற்சி இன்று காலை நடந்தது. மாநகர காவல் துறை, ஜே .எஸ் .எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் இது நடத்தப்பட்டது. இதில் 230 ஆயுதப் ...

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து ...

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் ...

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் ...