பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணை 143 அடி கொள்ளளவை கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகின்றது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ...

இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சரிவு வரலாறு காணாத அளவிற்கு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் களம் இறங்கிய நிலையில், அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து எப்படி மீண்டு வருவது என ...

தமிழகத்தில் உள்ள 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ...

நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் முதல் 2 ...

கோவை: தகவல் தொழில்நுட்ப துறையில் சிப் தேவைகளுக்கு சீனா, தைவானை தேடுகின்றனர் எனவே சிப் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென கோவையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் சார்ந்த 33 தொழில் அமைப்புகளுடன் முதலமைச்ச் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். இந்த கூட்டத்தில் தொழில்துறையில் ...

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அந்த மாநில உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த நிறுவனத்தின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர… மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் ...

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ...

டெல்லி: மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் படைத்துள்ளோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டிராய் அமைப்பின் வெள்ளி விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி தொழில்நுட்பம் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும் என்றும் 10 ஆண்டுகள் நிறைவில் 6ஜி சேவைகளை தொடங்க ...

டெல்லி : நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கான சுரங்கப் பாதைகள் அசாமின் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் எல்லையோர சாலைகளுக்கான துறைகள் இணைந்து சுமார் ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். பாதுகாப்புத் துறை சார்பிலும் நீருக்கடியிலான சுரங்கப் பாதைக்கு நிதி வழங்கும்படி ...

கோவை மாநகரில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகம் செய்யும் ஏற்பாடாக எரிவாயு இருப்பு வைக்கும் ‘சிட்டி கேஸ் ஸ்டேஷன்’ கட்டுமானப்பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய ...