கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர். அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ...
கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர்கள் ராமசாமி, சூர்யா மணி என்ற சவுந்தர்ராஜன். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சோமனூர் செந்தில் நகரில் ஜவுளி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு ...
கோவை குனியமுத்தூர் ,சுப்பு பிள்ளை வீதியில் நேற்று ஒருவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் குனியமுத்தூர் சுப்பு பிள்ளை வீதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பது ...
கோவையில் சேவல் சண்டை பந்தையம்.. சேவல் சண்டை பந்தையத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலிஸார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிப்பு.. கோவையில் தோட்டம் பகுதி ஒன்றில் சேவல் சண்டை நடத்திப் பந்தயம் கட்டி சட்டவிரோத செயல்கள் ஈடுபட்ட ஐந்து பேர் கைதாகினார். குமார், ராஜேந்திர பிரசாத், நாகராஜ், சீனிவாசன், ஜெயராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் ...
கோவையில் கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து போலிஸார் நடவடிக்கை.. ரத்தினபுரி பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு குற்ற பின்னணியில் உள்ள சூரிய பிரகாஷ் கஞ்சா விட்டதாக போலீசாரால் கைது. செல்வபுரம் பகுதியில் கஞ்சா விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மலை கிராமங்களில் இரண்டு கோவில்களில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் இருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த மதுபான கடையில் சூப்பர்வைசராக பாலமுருகன், விற்பனையாளராக சக்கரபாணி ஆகியோர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம், மேல் தெருவை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 53) இவர் ஒடந்துறை ஊராட்சி 7 -வது வார்டு கவுன்சிலராக உள்ளார் .இவரது மனைவி கமலா. இவர்களது வீட்டின் பின்புறம் வசிப்பவர் யுவராஜ் .பைக் மெக்கானிக். இவரது மனைவி நந்தினி நேற்று யுவராஜ் குடிபோதையில் தனது கர்ப்பிணி ...
கோவை பி.என்.புதூர், கோகுலம் காலணியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சன்மதி ( வயது 25) நேற்று இவர் கோகுலம் காலனி 3 -வது வீதியில் நடந்து சென்றார்.அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று இவர் மீது பாய்ந்து கழுத்தில் கிடந்த 9 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ...
கோவை கே .கே .புதூர், சாய்பாபா காலனி ,பெரிய சுப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் அருண் குமார் ( வயது 47) இவர் புது சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டில் ஸ்ரீ அங்காளம்மன் டிரேடர்ஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 -ந் தேதி இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று ...
கோவை அன்னூர் – அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர் ...













