கோவையில் கடன் சுமையால் இஸ்திரி தொழில் தூக்கில் தொங்கி தற்கொலை கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் . தண்டபாணி (46). இவர் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவரது மூத்த மகள் திருமண செலவுகள் மற்றும் இரண்டாவது மகள் படிப்பு செலவு ஆகியவற்றிற்காக அதிக அளவு பணம் செலவானது. ...
சமூக விரோதிகள் கூடாரமாக மாறிய ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி : நடவடிக்கை எடுக்கப்படுமா ? – கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்!!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் 11.07.1907 ஆம் ஆண்டு நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இங்கு வாழ்ந்த நம் முன்னோர்களால் மாணவர்களின் நலன் கருதி நிதி வசூல் ...
தோழியாக பழகி இளம் பெண்ணிடம் பல லட்ச ரூபாய் மோசடி கோவையில் தம்பதி உட்பட மூவருக்கு போலீஸ் வலை கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் என்பவரின் மகள் லத்திகேஸ்வரி ( 31). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசித்து வருகிறார் . கடந்த 2016 ஆம் ஆண்டு பி.காம் சி.எஸ் ...
செம்பட்டி அருகே ஆத்தூரைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியை திட்டியதாக கூறி, விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து (43) மினி லாரி ஓட்டுனரான இவரது மகள் ஷர்மிளா (15) கொடைரோடு அடுத்த, ...
திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...
கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் ..ஆவாரம்பாளையத்தில் உள்ள கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார் .அப்போது மாணிக்கம் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் ...
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுல் ( வயது 38)இவரதுவிசா காலாவதியானபிறகு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இது பற்றி தகவல் அறிந்தததும்ரேஸ்கோர்ஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் விசா முடிந்த பிறகும் அவர் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமுதம் அங்காடி என்ற பெயரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு வேடப்பட்டி குருடம்பாளையத்தைச் சேர்ந்த மதிஅரசு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன் தினம்ரேஷன் கடையில் இருந்த ரூ 1லட்சத்து 22 ஆயிரத்தை திருடி கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சுரேஷ்குமார் சாய்பாபா காலனி ...
கோவை அருகே உள்ள பி. என் .புதூர் ,ரத்தின சபாபதி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி விஜய லட்சுமி ( வயது 84 ) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 50 வயது மதிக்க ஒரு பெண் அவரது வீட்டுக்கு சென்றார் வீடு வாடகைக்கு ...
கோவை ஆர் .எஸ் . புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஆனந்த் (வயது 30) இவர் நேற்றுமேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை தடுத்து நிறுத்த முயன்றார்.அவர்கள் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போலீஸ்காரர் தனது ...