டிவிஎஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.43 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது.!!

ஆவடி : பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் டெஸ்ட் ஸ்டீல் சப்ளையர்ஸ் என்ற தனியார் ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலியில் எலந்தனூர் சடையான் குப்பம் பகுதியில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஓசூர் டிவிஎஸ் நிறுவனத்தில் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்ததின் பேரில் ரூபாய் 43 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஓசூர் பகுதிக்கு தனது நிறுவன ஊழியர் மூலமாக லாரியில் அனுப்பி உள்ளார் . ஸ்ரீதருக்கு அழகு சுந்தரம் என்பவர் தான் டிவிஎஸ் டெபுடி மேனேஜர் என்ற பேரில் பேசிய நபரும் பொருட்களை பெற்றுக் கொண்டதாகவும் விரைவில் பணம் அனுப்புவதாக தொடர்ந்து டிவிஎஸ் கம்பெனியிலிருந்து மெயில் வந்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் பேமெண்ட் விஷயத்தில் உடனே பணம் அனுப்பி விடுவார்கள் .பணம் அனுப்பவில்லை என்பதால் அவர் என் சி ஆர் பி 1930 மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் அளித்து சங்கர் கமிஷனர் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் அழகு சுந்தரம் என்ற பெயரில் மெயில் அனுப்பி பொருட்களைப் பெற்று அதனை ஸ்கிராப் ஆக மாற்றி விற்று பணத்தை திருடி உல்லாசமாக வாழ்ந்த கேடி மீஞ்சூர் பாலாஜி நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் வயது 36 தகப்பனார் பெயர் அப்துல் சுக் குர் பயன்படுத்திய ஈமெயில் மற்றும் மொபைல் போன் மூலம் கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். புழல் சிறையில் அடைக்கப்பட்டான்..