202 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் : 402 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது – 1827 கிலோ கஞ்சா பறிமுதல்.!!

சென்னை : போதை இல்லா தமிழகத்தை மாற்றிட தமிழக காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் தமிழகம் முழுவதும் போதை பொருளை அடியோடு ஒழித்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024 பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை போதைப் பொருள் மற்றும் ஆட்களை மயக்கும் பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 402 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். இது தொடர்பாக மொத்தம் 1827 கிலோகிராம் கஞ்சா 400 கிராம் மெத்தக் குலோன் 130 கிராம் மெத்தம் பெட்டமின் 250 கிராம் ஆம் பெட்டமின் 150 கிராம் சூடோபெரின் 1384 பையி வோன்ஸ் பாஸ் பிளாஸ் மாத்திரைகள் மற்றும் 130 நிட்கோர் மாத்திரைகள் ஆகியவை ரூ 202 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் 30 இருசக்கர வாகனங்கள் 6 நான்கு சக்கர வாகனங்கள் 1 ஆட்டோ 1 படகு பறிமுதல் செய்யப்பட்டன .திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் (29) கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸீயாஸ் பசீர்(27) அஜ்மல் (27) அக்பர் அலி(30) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 10 லச்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரனி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியசீலன்(37) மகேந்திரன்(32) சுகுமாரன்(39) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ 36 லட்சம் மதிப்புள்ள 364 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாத்து குளோரி (40) ஆபிரகாம் (28) ஆகிய இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ 10 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 104 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் சென்னையைச் சேர்ந்த தமிம் அன்சாரி( 57) என்பவரை கைது செய்தனர். அவனிடத்தில் இருந்து ரூபாய் 65 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் ஆம் பெட்டமின் 150 கிராம் சூடோ பெட்ரின் பறிமுதல் செய்தனர். கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தேவா ர கங் ங்கராஜ்(32) பிதானி ராஜா பாபு ( 40) மற்றும் நாகி ரெட்டி (33) ஆகிய மூன்று குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 32 லட்சம் மதிப்புள்ள 320 கிலோ கிராம் உலர் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினர் சென்னையைச் சேர்ந்த அமீர் அலி(51) என் பவனை கைது செய்து அவனிடத்தில் இருந்து ரூ 10 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் மெத்தகு லோன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருட்கள் தொடர்புடைய 23 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர் . தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர் 24 கிலோ கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (53) என்பவனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது . போதைப் பொருட்கள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சட்ட அமலாக்கம தவிர மாணவர்கள் இடையே துஷ் பிரயோகத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த 31 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் ஆட்களை மயக்கும் பொருட்கள் விற்பனை செய்வது கடத்துவது போன்ற தகவல்களை கட்டணமில்லா உதவி எண் 10581 வாட்ஸ் அப் நம்பர் 94984 10581 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..