வடமாநில தொழிலாளி குத்திக் கொலை : செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் வெறி செயல் – கோவையில் பரபரப்பு!!! கோவை, கிராஸ்கட் சாலை, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நகைக் கடை பின்புறம் தனியாருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அதற்காக உத்தர பிரதேஷ் மாநிலத்தில் இருந்து 6 தொழிலாளர்கள் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...

கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் அமைந்திருக்கிறது. இந்த மையத்தில் நேற்று (ஏப்ரல் – 6) ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ...

கோவை : சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்கள் ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு .இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29) இவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகன் திலீப் (19)மற்றும் மருதாச்சலம் மகன் கௌரிசங்கர் (21) ஆகியோர் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி ...

கோவை : வடகோவை முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி அனிதா (வயது 29 ) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் யூசுப் (வயது 19) குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து அனிதாவிடம் தகராறு செய்வாராம். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்நின்று கொண்டிருந்த அனிதாவை யூசுப் கைகளால் தாக்கி ...

கோவை கடைவீதி பக்கம் உள்ள முத்து விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் அர்ஜுன் கதம் (வயது 36) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர் . நிறுவனத்தில் வரவு – செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது 3 கிலோ ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள செம்மனாபதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 65) விவசாயம்செய்து வருகிறார்கள்.பள்ளி விடுமுறை என்பதால் நேற்று இவர் தனது பேரக் குழந்தைகளுடன் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்தார்.உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பூ மார்க்கெட் அருகே பஸ் சென்றபோது ...

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள நாகம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி ( வயது 62) காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிகள் 2 பேரை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சில்மிஷம் செய்தாராம் . இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.இது குறித்து அந்த ...

கோவை ஏப் 6கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் கேரளா அழைத்துச் சென்றனர். அதன்பிறகு கடந்த 2ஆம் தேதி அன்சாரியை கொச்சி ...

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் நேபாளம் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர்  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களையும் அவர்களையும் உதவி செய்த நபரையும் கைது செய்துள்ளனர். நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவுக்குள் ஊடுருவியதும் இங்கு நாசவேலைகளில் ஈடுபட வந்ததும் தெரியவந்துள்ளது. கைதான பாகிஸ்தானியர் இருவரின் அடையாளமும் ...