போலீசாரை தள்ளிவிட்டு ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்.!!

கோவை ஏப் 6கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் கேரளா அழைத்துச் சென்றனர். அதன்பிறகு கடந்த 2ஆம் தேதி அன்சாரியை கொச்சி வேலி – பெங்களூரு ரயிலில் கர்நாடகா நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த ரயிலில் நேற்று முன்தினம் அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவைபோத்தனூர் நோக்கி மெதுவாக சென்று கொண்டிருந்தது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அன்சாரி திடீரென்று போலீசாரை தள்ளி விட்டு விட்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார் .பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.இந்த நிலையில் தப்பி ஓடிய கைதி அன்சாரி திருவனந்தபுரம் பூந்துறை பகுதியில் பதுங்கி இருப்பதாகபூந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அன்சாரியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.இது பற்றி போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அன்சாரியை அழைத்து வர போத்தனூர் போலீசார் கேரளா சென்றுள்ளனர்.