கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மிலாது நபி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், தனியார் மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கடைகள் ,நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், இறக்குமதி செய்யப்பட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மது கூடங்களும் ...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை 23 வயதான ஃபெய்த் டென்க்லி என்ற இளம் பெண் விமானி இயக்கி வந்தார். பஹாமாஸ் தீவில் உள்ள தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக அவர் தனியாகப் ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,538 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 12,324 கனஅடியாகவும், நேற்று காலை 12,883 கனஅடியாகவும் நீர்வரத்து உயர்ந்தது. ...
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வருசநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இப்புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் வசித்து, விவசாயம் செய்து வரும் 4,601 விவசாயிகளை துணை ராணுவ படை உதவியுடன் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நைஜர் மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.நைஜர் மாநிலத்தின் போர்கு (Borgu) உள்ளாட்சிப் பகுதிக்கு உட்பட்ட தேகாரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் கனரக ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளி வழிபாட்டின் ...
அமெரிக்காவில் 2 இந்தியர்கள் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (28), அமெரிக்காவின் நியூயார்க்கில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரிச்மண்ட் ஸ்ட்ரீட் பகுதியில் பீட்சா டெலிவரி ...
நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய நடத்தப்பட்ட சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 239 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு ...
ராமேஸ்வரம்: கள்ளக்கடல் எச்சரிக்கையை தொடர்ந்து, தனுஷ்கோடி செல்ல 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பாக்ஜலசந்தி கடலில் பலத்த சூறைக்காற்றுடன் திடீரென கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன் எச்சரித்தது. மேலும் கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் ...
மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் வசதியுடன் கூடிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் மெட்ரிக்டன் ...
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் காமரூன் எல்லை அருகே உள்ள சாம்போய் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பாபுவா நகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சாம்போய் பகுதியில் அமைந்திருந்த திறந்தவெளித் தங்கச் சுரங்கத்தில், நிலத்தடிச் சுரங்கப் பாதைகள் ...













