நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மத்திய அரசு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரின் 26 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். ...

துபாயில் வசிப்பவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சுற்றுலா அழைத்து வந்தால் சலுகைகளை பெறும் வகையில் கவர்ச்சிகரமான சுற்றுலாத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், ‘துபாய் அழைப்பு’ என்ற விளம்பர தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி துபாயில் வசிப்பவர்கள், ஜூலை 20 ஆம் தேதி முதல் அக்டோபர் ...

நாட்டின் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (Neet) எதிர்ப்பு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில் இரவு பகலாக நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை பாலன் இல்லத்தில் ‘காக்ரோச் ஜனதா ...

டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. ஆண்டு முழுதும் பரவலாக பாதிப்பு இருந்தாலும், ஜூன் மாத்திற்கு பின், சற்று அதிகரிக்க தொடங்குகிறது. அதன்படி, இந்த ஆண்டில் இது வரை, 9,250 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு, ...

ஆந்​தி​ரா, கர்​நாடக மாநிலங்​களில் விளைச்​சல் குறைவு காரண​மாக தமிழகத்​தில் அரிசி விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.80-க்கு விற்​கப்​படுகிறது. தமிழகத்​தில் சாதம், பிரி​யாணி, பிரைடு ரைஸ், இட்​லி, தோசை, புட்டு என அரிசி உணவு அதி​க​மாக உட்​கொள்​ளப்​படு​கிறது. மேலும், அதிரசம், முறுக்​கு, கொழுக்கட்​டை, பனி​யாரம் போன்ற தின்​பண்​டங்​களும் அரிசி​யில் செய்​யப்​படு​வது ...

தவெக ஆட்சி அமைந்தது முதலே பொதுப்பணித்துறையில் வெளியிடப்படும் டெண்டர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக மே மாதம் வெளியிடப்பட்ட டெண்டர் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிந்து, 4 மணிக்கு முடிவுகள் சொல்லப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நீர்வளத்துறையின் சார்பில் ...

அமெரிக்காவில் உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இது உலகின் மிக பெரிய ஜெனரிக் மருந்து ஏற்றுமதி நாடான இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்தாண்டு அமெரிக்காவின் ...

கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரம் முழுவதும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து முன்பு 30 விமானங்கள்வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ...

போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து இன்று டெல்லி உயர்நீதிமன்றம் அவசர விசாரணை மேற்கொள்கிறது. முன்னதாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் மற்றும் மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற ...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் இனிமேல் பீடி, சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பார்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், சுகாதார நடைமுறைகளை உறுதி செய்யவும் பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் பார்களில் பீடி, ...