கோவை விமானங்களின் எண்ணிக்கை குறைந்தது

கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரம் முழுவதும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து முன்பு 30 விமானங்கள்வரை இயக்கப்பட்டு வந்தது.
தற்போது அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் இயக்க செலவுகள் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வினால் ஏற்படும் இழப்பை சமாளிக்க பல்வேறு விமான நிறுவனங்கள், விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இதன்படி உள்நாட்டில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை மொத்தம் 24 ஆக குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்மாதத்துக்கு பின்னர் நிலைமை சீராகும் என்றும், அதன்பின்னர் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் விமான நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இருந்து அபுதாபிக்கு அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் விமானம் இயக்கப்பட உள்ளது. கோவை மற்றும் கேரள பகுதியை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அபுதாபி விமானத்துக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 3 ஆக உயரும்.