பைஜுஸ்’ நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை

ந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது பைஜுஸ் கல்வி நிறுவனம். இருப்பினும், காலப்போக்கில் இந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைக் கண்டது.

இந்நிலையில், இதன் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த இணைய வழிக் கல்வி நிறுவனம் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. இந்த வளர்ச்சியைக் கண்டு ஏராளமான சர்வதேச நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தன. அதனால், பைஜுஸ் நிறுவனமும் மிகப் பெரிய அளவில் உயர்ந்தது. குறிப்பாக, இந்த முதலீடுகளால் மிகக் குறுகிய காலத்தில் இந்நிறுவனம் 22 பில்லியின் டாலர் மதிப்பை எட்டியது.இருப்பினும், இந்த நிறுவனம் வளர்ந்த வேகத்தை விடவும், மிக வேகமாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த சரிவையொட்டி முதலீடு செய்திருந்த நிறுவனங்களும் பின்வாங்கின. இதனால், இந்நிறுவனம் பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், கத்தார் முதலீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பிற்காக வழங்கப்பட்ட இந்த தண்டனையைத் தொடர்ந்து, வழக்கு செலவாக ரூ.60 லட்சத்தைச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும், இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக பைஜு ரவீந்திரனின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.