கோவை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி..

கோவை சாய்பாபா காலனி போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரங்கராஜ் (வயது 28) இவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார் .இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் இரண்டாவது மாடியில் இருந்து படி ஏறி ,இறங்க மிகவும் சிரமப்பட்டார் .எனவே அவரை மதுரை மேலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ரங்கராஜ் நேற்று கோவை வந்தார் .அத்துடன் அவர் தரைத்தளத்தில் வீடு வாங்க முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இதனால் மனைவியை தன்னுடன் அழைத்து வர முடியவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவு பணிமுடிந்து வீட்டுக்கு வந்த ரங்கசாமி மிகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அடைந்த அவர் தற்கொலை செய்வதற்காக வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனே அதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பித்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீஸ்காரர் தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.