காலை சிற்றுண்டி திட்டம்: புதிய தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது- தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்..!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை மற்றும் மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று  தொடங்கி வைத்தார்.